தாய்மார்களின் தினம் 59-05-!0 1. ...-?... கூடாரம்... என்னுடைய ஜெபமாயுள்ளது... இந்தக் கூடாரத்தைக் குறித்த ஆவிக்குரிய வாஞ்சையைக் காணும் போது, நான் நிச்சயமாகவே இக்காலையில் மகிழ்ச்சி அடைகிறேன், மேலும் எப்படியாக அந்த... அவர்கள் இப்பொழுது ஒரு புதிய சபையைக் கட்ட ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள், அதற்காக அங்கே கையெழுத்தாயிற்று. அது அவசியமென்று நான் எண்ணுகிறேன். பாருங்கள் பிறகு... கர்த்தராகிய இயேசு தாமதிப்பாரானால், நாம் போய் விட்ட பிறகு, அவர்கள் அதைக் கொண்டு இருப்பார்கள்... நம்முடைய பிள்ளைகள் சபைக்குப் போக ஒரு இடத்தைக் கொண்டு இருக்க வேண்டியிருக்கும். நாம் ,''பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்புக் கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக தைரியமாய்ப் போராட வேண்டுமென்று விரும்புகிறோம் (யூதா 1:3),''. அது ஒரு நல்ல காரியம் என்று எண்ணுகிறேன். 2. நான் சிறிது நேரத்திற்கு முன்பு உள்ளே வந்து கொண்டிருக்கையில், இங்கே கூடாரத்தில், கடந்த சில கூட்டங்களில் சுகம் பெற்றதைக் குறித்து சாட்சி கூறியதோடே கூட, கூடுதலாக அநேக சாட்சிகளும் கூறப்பட்டன... அவர்கள் அப்படியே அதிக எண்ணிக்கையில் சுகமளித்தல்களைத் தொடர்ந்து பெற்று வருகின்றனர், மகத்தான அற்புதமான சுகமளித்தல்களைப்பெற்று வருகின்றனர். 3. நான் இப்பொழுது தான் வெளியே வாசலில் என்னுடைய மனைவியையும் பிள்ளைகளையும் விட்டு வந்து இருக்கிறேன்; அங்கே ஒரு சகோதரி இருந்தார்கள், அவர்கள் இப்பொழுது இங்கே அமர்ந்திருக்கிறார்கள், அவர்கள் அங்கே தங்களுடைய சிறு பேரனுக்கு நடந்த ஒரு மகத்தான அற்புதத்தைக் குறித்து கதறி அழும் அளவிற்கு மிகவுமாக ஆனந்த சந்தோஷமடைந்தார்கள், அது சாட்டனூகாவில் (Chattanooga) நடந்தது என்று நினைக்கிறேன். அது இங்கே இருக்கும் திருமதி.நாஷ் அவர்கள் தான். உங்களுடைய சிறு பேரன் ஒரு வேதனையால் அவதிப்பட்டான். இங்கே கடந்த கூட்டத்தின் போது என்று நினைக்கிறேன், கர்த்தராகிய இயேசு அந்த சிறு பிள்ளையை அழைத்து, ,''கர்த்தர் உரைக்கிறதாவது, அது போய் விட்டது. அவன் சுகம் அடையப் போகிறான்,,'' என்றார். அந்தச் சிறு பையன் எவ்வளவு சுகமாக இருக்க முடியுமோ அவ்வளவு பரிபூரண சுகமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறான். அந்த சாட்சிகளைக் கேட்கும் போது, அது பரவசமூட்டுகிறது. 4. அதன் பிறகு ஒரு வாலிபன், அவனும் கூட இங்கே இருக்கிறான், அவன் இப்பொழுது தான் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட திருமதி.ஸ்டாட்ஸ் அவர்களுக்காக ஜெபிக்கும்படி கேட்டுக்கொண்டான். அவர்களுடைய வாஞ்சை.. பாருங்கள், நாங்கள் யாருக்காகவும் ஜெபிக்க அவர்களுக்கு விருப்பமில்லை எனில், ஏன் அவர்கள்... நீங்கள் முயற்சி செய்து, நீங்கள் ஜனங்களுக்காக ஜெபிக்க வேண்டுமென்று அவர்கள் விரும்புகிற காலம் வரையில், அங்கே ஒரு வாஞ்சை இருப்பதையே அது காட்டுகிறது. நீங்கள் பாருங்கள்-? சில சமயங்களில் அது அந்த அளவுக்கு மிகவும் மோசமடைகிறது - மிக மோசமாக அல்ல, ஆனால் அனேகருக்கு அவ்வாறு செய்ய வேண்டியுள்ளது. நீங்கள் எங்காவது ஓரிடத்திற்கு புறப்பட்டுச் சென்று, உங்கள் தலையை இளைப்பாறப் பண்ணி, உயிர் வாழ சிறிது மறைந்து கொள்ள வேண்டியதாய் உள்ளது. ஆனால் அவர்கள் அதைச் செய்வதற்காக நான்-நான் மகிழ்ச்சி அடைகிறேன். நான் அவர்களைக் காண எனக்கு விருப்பமில்லை என்று ஒரு போதும் எண்ணி விடாதீர்கள், ஏனென்றால் நான் ஜெபிக்க யாருக்குமே விருப்பமில்லை எனில்... அவர்களுக்கு விருப்பமில்லை எனில், என்னுடைய ஊழியம் எங்கேயிருக்கும்-? புரிகிறதா-? புரிகிறதா-? 5. ஆனால் நீங்கள் சில நேரங்களில், ,''சகோதரன் பிரன்ஹாமே, ஜனங்கள் அவ்விதமாக அழைத்துக் கொண்டிருக்கும் போது, நீர் நழுவி எங்கோ ஓரிடத்திற்குப் போய் விடுகிறீரே, இது எனக்கு புரியவில்லையே,,'' என்று கூறும் போது; நான் உயிர் வாழ்ந்து, ஜனங்களுக்காக ஜெபிக்க வேண்டுமானால், நான் அவ்விதம் செய்தாக வேண்டும். நீங்கள் சற்றும்... அது அது வெறுமனே இங்கே இந்த ஒரு இடத்தில் அல்ல; உலகம் முழுவதும் ஜெபிக்க வேண்டியுள்ளது, உங்களுக்குப் புரிகிறதா-? அது உண்மையிலேயே கடினமானது. நீங்கள் அதைப் புரிந்து கொண்டீர்கள் என்று நிச்சயம் உடையவனாய் இருக்கிறேன். 6. ஓ, ஒரு கிறிஸ்தவனாய் இருப்பதென்பது மிகவும் நல்லது-! அது கிறிஸ்துவுக்காக இல்லாமலிருந்தால், நான் என்ன செய்திருப்பேன் என்பதே எனக்குத் தெரியவில்லை, எனவே... தேவனிடத்தில் விசுவாசம் கொண்டிருந்து, அவரை நம்புகிற, விலையெறப் பெற்ற விசுவாசத்தைப் போன்ற விசுவாசத்தை உடைய கிறிஸ்தவ ஜனங்களுடன் ஐக்கியம் கொண்டிருப்பது என்பது; ஏதோ ஓரு மகிமையான நாளில் இந்த யுத்தமெல்லாம் முடிந்து, ஜெயம் பெற்றவர்களாய் மறு கரையில் அவருடைய சாயலில் மீட்கப்பட்டவர்களாய் நிற்போம் என்று நான் விசுவாசிக்கிறேன். 7. பிறகு, அடுத்ததாக வரும் கூடாரத்தையும் அது சம்பந்தமான காரியங்களையும் குறித்தும் சற்று சுருக்கமாக அறிவிப்பைக் கொடுக்க விரும்புகிறேன். நாம் நம்முடைய அமைப்பை (foundation) புதுப்பிக்கிறோம், குறிப்பாக கூட்டங்களுக்கான என்னுடைய பாகத்தைப் புதுப்பித்தல். தொடக்கம் முதல் இந்த கூட்டங்கள் முழுவதுமாக, அநேக வருடங்களுக்கு முன்பு, சுவிசேஷ பாகத்தில், நான் இதில் தொடங்கினது முதற்கொண்டு, வேறொரு கூட்டம் ஜனங்களைக் கொண்டு இருப்பதற்கான ஒரு அமைப்பை உருவாக்குவதற்குப் பதிலாக, நான் அப்படியே எனக்கு அறிமுகமான கூட்டத்தினரையே பயன்படுத்தி தான் இந்த அமைப்பை உருவாக்கினேன்; என்னுடைய எல்லா கூட்டங்களும் பிரன்ஹாம் கூடாரம் என்ற பெயரின் கீழ் தான் நடந்து உள்ளன. அது நியூ-ஆல்பெனியிலுள்ள யூனியன் நேஷனல் வங்கியில் (Union National Bank) தான் கையாளப்பட்டு உள்ளன, அந்த வங்கி மூலமாகத் தான் பணமானது செலுத்தப்பட முடியும், அதற்கு வரி கிடையாது. நான் அவ்வாறு செய்யாதிருந்தால், எடுக்கப்பட்ட எல்லா பணங்களுக்காகவும் நான் வரி செலுத்த வேண்டியிருக்கும், நான் பிரன்ஹாம் கூடாரம் என்பதை ஒரு அமைப்பாக உபயோகிக்காமல் இருந்தால், நான் தான், வரி செலுத்த வேண்டியிருக்கும். 8. நான் காலங்காலமாக அதை அறிவித்து வந்துள்ளதை உங்களில் அநேகர் கேட்டிருக்கிறீர்கள். நான் அதைச் செய்ய வேண்டுமானால், இதைச் செய்ய வேண்டியுள்ளது. அதன் பிறகு - அடுத்து, நாம் இப்பொழுது ஒரு புதிய அமைப்பை உருவாக்குகிறோம். நான்... என்று அநேகர் அறிந்து உள்ளதைப் போன்று நாங்கள். ,''நான், எல்லா சம்பளத்தையும் பிரன்ஹாம் கூடாரம் மூலமாகவே தொடர்ந்து வாங்கி வந்துள்ளேன்,,'' என்று அறிவிப்பு செய்ததை எத்தனை பேர் எப்பொழுதாவது கேட்டிருக்கிறீர்கள்-? சற்று உங்கள் கரங்களை மேலே உயர்த்துங்கள், எல்லாருமே... நிச்சயமாக, நீங்கள் எல்லாருமே கேட்டிருக்கிறீர்கள். அது எல்லாமே... 9. எனவே ஆராதனை முடியும் போது, நீங்கள் விரும்பினால், என்னிடம் அங்கே ஒரு சிறிய அறிக்கை (வாக்குமூலம்) உள்ளது, எனவே நீங்கள், நீங்கள் வெளியே போகையில், நீங்கள் கையொப்பமிடுவீர்களானால்... சகோதரன் ராய் ராபர்ஸன் அங்கே பின்னால் அதை வைத்திருப்பார். 10. ஏனென்றால் நாம் வேறொரு அமைப்பை உருவாக்கப் போகிறோம். அதே காரியம் தான், அப்படியே - ஆனால் வேறொரு அமைப்பு, கூட்டத்தில் எடுக்கப்படும் நம்முடைய எல்லா நிதி மற்றும் காரியங்களுக்காக வரி செலுத்தாமல் இருக்கும்படியாக - வழக்கத்தைப் போன்று அது யூனியன் நேஷனல் வங்கியிலேயே போடப்பட்டு, ஒரு - ஒரு அமைப்புக்குப் பதிலாக - வேறொரு அமைப்புக்குப் பதிலாக இந்த கூடாரத்தின் மூலமாகவே கையாளப்படும்; ஏனென்றால் இது பிரன்ஹாம் கூடாரம் என்ற பெயரில் ஏற்கனவே ஒரு அமைப்பாக உள்ளது, உங்களுக்குப் புரிகிறதா-? எனவே இங்கே ஒரு பிரன்ஹாம் இருக்கிறார், அங்கே ஒரு பிரன்ஹாம் இருக்கிறார், மேலும் இதைப் போன்று, வித்தியாசமான அமைப்புகள் உள்ளன, அது மிக நல்ல பொருத்தமாக இல்லை. 11. சகோ.ராபர்ஸன் அதைக் குறித்துப் பொறுப்பெடுத்துக் கொள்வார், அவர்கள் வெளியே போகும் போது, அதைக் குறித்து விருப்பமுள்ளவர்களை அவர் கவனித்துக் கொள்வார். நாம் அதைப் பாராட்டுவோம். 12. இப்பொழுது, இக்காலையில், நாம் ஆராதனைக்குள் போகும் முன்பாக, நான் இதைக் கூற விரும்புகிறேன், கர்த்தருக்குச் சித்தமானால், நான் இன்றிரவு மீண்டும் திரும்பி வர முயல்வேன். சகோதரன் நெவில் அவர்களிடமிருந்து இரண்டு கூட்டங்களையுமே எடுத்துக் கொள்வதை நான் வெறுக்கிறேன், ஆனால் அவரோ நான் இன்றிரவு மீண்டும் பேச வேண்டுமென்று என்னிடம் மிகவும் தாராளமாக கேட்டுக் கொண்டார். கர்த்தருக்குச் சித்தமானால், நான் இன்றிரவு ஒரு சுவிசேஷ பாடத்தின் பேரில் பேச விரும்புகிறேன், அதன் தலைப்பு: ,''இது யார்-?,'' (Who Is This-?) என்பதாகும். புரிகிறதா-? ,''இது யார்-?,'' என்ற தலைப்பு. 13. எனவே இக்காலையில், நான்... விரும்புகிறேன். நான் இக்காலையில் தாய்மார்களின் தினம் என்ற பாடத்தின் பேரில் பேசுவதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். இன்று பிற்பகல் வேளையிலும் காலையிலும் தாய்மார்களின் தின நிகழ்ச்சிகளினால் எல்லாமே நிறைந்திருக்கும் என்பது எனக்குத் தெரியும். எனவே நான் ஒருவிதமாக சிலவற்றை ஒன்றாக சேர்த்து விடலாம் என்று நினைத்தேன்; ஏனென்றால் இந்த ஆராதனை முடிந்த பிறகு, உடனடியாக நாம் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க விரும்புகிறோம். 14. மேலும் வழக்கத்தின்படி, தேவன் ஒரு சுகமளிப்பவர் என்று நாம் விசுவாசிக்கிறோம், அவர் வியாதிப்பட்டவர்களையும் அவதிப்படுபவர்களையும் சுகமாக்குகிறார். அவர் அதைச் செய்கிறார் என்பதை நான் அறிவேன். அது எந்த சந்தேகங்களுக்கும் அப்பாலுள்ளது. ஏனென்றால் மிகவும் அதிகமான சாட்சிகள் அங்கே திரளாக குவிந்து காணப்படுகின்றன, நாம் அதை அறிவோம். 15. சகோ.ஜீன் அவர்களும் லியோ அவர்களும் பொறுக்கி எடுத்து வைத்திருந்த சாட்சிகளைக் கொண்ட ஒரு கோணிப்பையை நான் நேற்று பார்த்துக் கொண்டு இருந்தேன். கர்த்தர் ஜனங்களுக்காக செய்திருந்த பிரமிக்கத்தக்க அற்புதமான சுகமளித்தல்கள் (சாட்சிகள்) ஒரு பெரிய கோணிப்பை முழுவதுமாக நிரம்பியிருந்தது. 16. இதுவே இவ்வளவு இருக்குமானால், நாம் சம்பவித்திருந்த எல்லா அற்புதங்களையும் பதிவு செய்து வைத்திருந்தால் எவ்வளவு இருக்கும் என்று நினைத்தேன்-? புவேர்ட்டோ ரிக்கோ (Puerto Rico)விலும் ஜமைக்காவிலும் மட்டுமே கர்த்தர் செய்த 10,000 அல்லது அதற்கும் அதிகமான, அவருடைய பிரமிக்கத்தக்க சுகமளித்தல்களைக் குறித்த சாட்சிகள் வேகமாக பரவிச் சென்று கொண்டு இருக்கின்றன என்று யூகிக்கிறேன். இப்பொழுது, நாம் புத்தகத்தை திறப்பதற்கு முன்பாக, ஆக்கியோனிடம் பேசுவோம். 17. கர்த்தாவே, நாங்கள் உமக்கு மிகவும் நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம், அது - நாங்கள் எங்கள் தலைகளைத் தாழ்த்தியிருக்கிற சமயத்தில், பேச வேண்டிய வார்த்தைகளுக்காக நாங்கள் அப்படியே திக்கி திக்கி பேசுகிறோம்; நாங்கள் எவ்வாறு உம்மை தொழுது கொள்ள வேண்டும் என்றும், நீர் எங்களுக்கு எவ்வளவு முக்கியமானவராய் இருக்கிறீர் என்பதுமான எங்களுடைய மிக ஆழமான அன்பை வெளிப்படுத்துவதற்கும், உம்மோடு எப்பொழுதாகிலும் தொடர்பு கொண்டு வந்து உள்ள ஒரு மனிதனுடைய இருதயத்தின் உணர்வுகளையோ, அல்லது ஒரு ஸ்திரீ, பையன் அல்லது சிறு பெண்ணின் இருதயத்தின் உணர்வுகளையோ வெளிப்படுத்துவதற்கும் மனித உதடுகளினால் அதை எடுத்துக் கூற (முடியும்) என்று நான் நம்பவில்லை. அது பாவத்தில் இருந்து எங்களை வேறு பிரித்பு இருக்கிறது, மேலும் அது உலகத்தில் இருந்தும் எங்களை வேறு பிரித்திருக்கிறது. நித்தியமானதும் ஆசீர்வதிக்கப்பட்டதுமான ஏதோ ஓன்றை எங்களுக்கு அது கொடுக்கிறது. போதுமான வார்த்தைகளை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. 18. ஒரு சில வாரங்களுக்கு முன்பு, ஒரு விசை ஒரு உயர்ந்த பெருந் தன்மையுள்ள மனிதன் மூலமாக சொல்லப்பட்டபடியே, அவரால் ஏறக்குறைய ஒன்பது வித்தியாசமான மொழிகளில் சரளமாகப் பேச முடியும் என்றும், எங்கள் அன்பான ஜனாதிபதியாகிய ட்வைட் ஐசன்ஹோவர் அவர்களுக்கு ஆலோசகராக இருக்கும் தம்முடைய ஸ்தானத்தில் அவர் பதவி வகித்துக் கொண்டிருந்தார் என்றும் கூறினார். அவரால் ஒன்பது மொழிகளில் சரளமாகப் பேச முடிந்த போதிலும், அவர் பரிசுத்த ஆவியைப் பெற்ற போது, அவர் ஒன்பது மொழிகளில் ஒவ்வொன்றையும் முயற்சி செய்து பார்த்தார், அவரால் கண்டு பிடிக்க முடிந்த எந்த வார்த்தைகளும் அங்கே இல்லாதிருந்தது, அதை வெளிப்படுத்தக் கூடியது எதுவுமே இல்லாதிருந்ததாக அவர் கூறினார், எனவே அதை வெளிப்படுத்தவும், உமக்கு நன்றி கூறவும் ஒரு புது பாஷையை நீர் அவருக்குக் கொடுத்ததாகக் கூறினார். நாங்களும் கூட அவ்விதமாகவே உணருகிறோம், கர்த்தாவே; வாழ்க்கை முடியும் போது, நாங்கள் ஒருக்கால் ஒரு வித்தியாசமான பாஷையை என்றென்றுமாகப் பேசுவோம், அப்போது தான் நாங்கள் உம்மைக் குறித்து நினைப்பதை எங்களால் வெளிப்படுத்த முடியும். 19. இப்பொழுதும் கர்த்தாவே, நீர் இந்த கூடாரத்தை ஆசீர்வதிக்க வேண்டும் என்றும், இதன் மேய்ப்பரையும், தருமகர்த்தாக்களையும், டீக்கன்மார்களையும், இதனோடு தொடர்புடைய எல்லா கூட்டாளிகளையும், இங்கே விஜயம் செய்கிற ஜனங்களையும், வாசல்களுக்கு உள்ளே வருகிறவர்களையும் வெளியே போகிறவர்களையும் நீர் ஆசீர்வதிக்க வேண்டுமென்று நாங்கள் வேண்டிக் கொள்ளுகிறோம். அது எப்போதுமே ஒரே நோக்கத்துக்காக அர்ப்பணம் செய்யப்பட்ட இடமாகவும், இளைப்பாறுதலின் புகலிடமாகவும், காணப்படுவதாக, களைப்புற்றவர்கள் இதன் வாசல்களுக்கு உள்ளே வந்து, தங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதலையும், சமாதானத்தையும் கண்டு அடைவார்களாக. வியாதிப்பட்டவர்கள் வாசலுக்கு உள்ளே வந்து, சுகம் அடைந்தவர்களாக வெளியே போவார்களாக, ஏனென்றால் சர்வவல்லமை உள்ள தேவனின் என்றென்றும் ஜீவனுள்ள பிரசன்னம் இதன் கூரைக்குக் கீழே வாசமாய் இருக்கிறது. 20. கர்த்தாவே, இப்பொழுது அமைக்கப்பட்டுக் கொண்டு வருகிற இந்த அடுத்த திட்டத்தில், நீர் முடிவெடுக்கும் குழுவையும் (board), எல்லாரையும் சந்திக்க வேண்டும் என்று நாங்கள் வேண்டிக் கொள்கிறோம். அது உமக்கும் அவ்வாறே பிரியமாய் இருக்குமானால், இந்தப் பழைய குளத்தண்டையிலும், களைச்செடிகள் முளைத்திருந்த இந்த நிலத்திலும் ஒரு நாள் ஜெபித்த ஜெபத்தின் ஒரு தொடர் ஞாபகார்த்தமாக அது இருக்கும்; இப்பொழுதோ அது ஒரு கலங்கரை விளக்கமாகவும், சோர்வுற்றவர்களுக்கு இளைப்பாறுகிற ஒரு புகலிடமாகவும் இருக்கிறது, அந்த ஜெபத்திற்குக் கிடைத்த பதிலின் நிமித்தமாகவே அவ்விதம் இருக்கிறது. 21. இப்பொழுதும் உம்முடைய மகத்தான சித்தத்திற்கு முரணாக நாங்கள் செய்திருக்கிற அல்லது சொல்லி இருக்கிற அல்லது நினைத்து இருக்கிற எதையும் எங்களுக்கு மன்னியும்; கர்த்தாவே, அது எங்கள் இருதயங்களில் இருந்து வரவில்லை என்பதை நினைவு கூறும். நாங்கள் அதை எங்கள் செய்கையினாலோ அல்லது எங்களுடைய உதடுகளினாலோ வெளிப்படுத்த மாத்திரமே செய்திருக்க வேண்டும். ஆனால் நீர் எங்கள் சத்தத்தை துரிதமாக கேட்டீர். நாங்கள் தவறாக இருப்பதைக் கண்ட போது, நாங்கள் அதை அறிக்கை செய்ய வாஞ்சை உள்ளவர்களாய் இருந்தோம். எங்கள் இருதயத்தில் அக்கிரமத்தை வைத்திருக்க நாங்கள் விரும்பவில்லை, அவ்வாறு எங்கள் இருதயத்தில் அக்கிரமத்தை வைத்திருந்தால், தேவன் எங்கள் ஜெபங்களுக்குப் பதிலளிக்க மாட்டார் என்பதை நாங்கள் அறிவோம்; ஆனால் தொடர்ந்து எங்கள் தவறுகளை அறிக்கை செய்து கொண்டு இருக்கிறோம்... 22. கர்த்தாவே, இக்காலை வேளையில், தாய்மார்களின் தினத்தின் இந்த ஞாபகார்த்த நாளை கொண்டாடுகிற, இந்த தேசத்தின் ஒரு முனை முதற் கொண்டு மறுமுனை வரையிலும் இருக்கிறவர்களை நீர் ஆசீர்வதிக்க வேண்டும் என்று நாங்கள் வேண்டிக் கொள்கிறோம். ஆனால் வெறுமனே இன்று தான் தாய்மார்களின் தினமாக இல்லாமல், ஒவ்வொரு நாளும் அவ்விதமாக இருப்பதாக. 23. தேவனே, இக்காலையில், தேவனை விட்டுத் தூரமாக அலைந்து திரிந்து கொண்டிருக்கிற தாய்மார்களும், ஸ்திரீகளும் தாங்களாகவே இக்காலையில் வந்து, தாய் என்ற வார்த்தைக்கு ,''பெற்றவள் (one who has begotten),'' என்பதை உணர்ந்து கொள்ளும்படி அருளும். அவள் தன்னுடைய புருஷனோடு கொண்டு உள்ள இணைப்பிலிருந்து வந்த குழந்தைகள், அவளுடைய பராமரிப்பின் கீழ் தேவன் வைத்திருக்கிற புனிதமான சிறு ரத்தினங்கள் என்பதை அவள் உணர்ந்து கொள்வாளாக. ஆகையால், அந்தக் குழந்தைகளின் வளர்ப்புக்காக தேவன் அவளைப் பொறுப்பாளியாக்குவார். நல்ல ஸ்திரீயை குறித்தும், நல்ல தாயைக் குறித்தும், அவள் எப்படி இருக்கிறாள் என்பதைக் குறித்தும் வேத வாக்கியம் கூறுகிறபடி, ,''அவள் பிள்ளைகள் அவளை பாக்கியவதி என்பார்கள். (நீதி. 31:28),'' 24. ஓ கர்த்தாவே, அவர்கள் இந்நாளில் வேதவாக்கியங்களை விட்டு மிகவும் தூரமாய் போய், அவர்கள் அநேகமாக மிருகங்களைப் போல நடந்து கொள்வதை நாங்கள் காணும் போது, தேவனே, அவர்கள் இருக்க வேண்டிய ஸ்தானத்துக்கு அவர்களைத் திரும்பவும் அழைக்கும் ஒரு பழைமை நாகரீகமான எழுப்புதலை எங்களுக்குத் தர வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். 25. கர்த்தாவே, உண்மையான தாய்மார்களுக்காக உமக்கு நன்றி உள்ளவர்களாய் இருக்க நாங்கள் மறந்து போவதாக நோக்கங் கொள்ளவில்லை, நாங்கள் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிற அப்படிப்பட்ட உண்மையான, மெய்யான தாய்மார்களையும் கொண்டிருக்கிறோம் என்பதை அறிவோம். தேவனே, அவர்களை ஆசீர்வதியும். அவர்கள் எங்களுக்குப் பெரிய பொக்கிஷங்களாக இருக்கிறார்கள், கர்த்தாவே, நீர் அவர்களோடு தொடர்ந்து இருக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம்; அவர்கள் சந்தோஷமாக ஜீவித்து அவர்களுடைய கர்ப்பத்தின் கனி தேவனை சேவிப்பதைக் காணுவார்களாக. 26. தேவனே, இக்காலையில், தங்கள் தாயார் இந்த செயல் காட்சிக்கு (scene of action) அப்பால் இன்று கடந்து போய் விட்டார்கள் என்பதைக் கூறும்படி, வெள்ளை நிற ரோஜா மலரை அணிந்துள்ள, அல்லது வெள்ளை நிற மலரை அணிந்து உள்ளவர்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம், தேவனாகிய கர்த்தாவே, அவர்கள் சமாதானத்தில் இளைப்பாறி, அவர்கள் பிரயாசங்கள் அவர்களைப் பின் தொடருவதாக. இதை அருளும், கர்த்தாவே. 27. இப்பொழுதும் கர்த்தாவே, உம்முடைய வார்த்தையை எடுத்து ஜனங்களோடு பேசி, அவர்களுக்கு ஆறுதலைக் கொடும், அந்த காரணத்தினால் தான் நாங்கள் இங்கே கூடி வந்திருக்கிறோம்: உம்முடைய பிரசன்னத்தை உணரவும், உம்முடைய வார்த்தையைக் கேட்கவும், ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் இருக்கவும் இங்கே கூடி வந்திருக்கிறோம்; நாங்கள் உள்ளே நுழைந்த போது இருந்ததைக் காட்டிலும் மேலான மனிதர்களாகவும், ஸ்திரீகளாகவும், பையன்களாகவும், பெண்களாகவும் இங்கிருந்து போவோமாக. தேவ குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் நாங்கள் இதைக் கேட்கிறோம். ஆமென். 28. அவருடைய ஸ்தோத்தரிக்கப்பட்ட வார்த்தையை வாசிப்பது எனக்குப் பிடிக்கும். எனவே நாம் இக்காலையில் 1-கொரிந்தியர் புத்தகத்துக்குத் திருப்பி, 15-ம் அதிகாரம். முதலாம் வசனம் தொடங்கி ஒரு பாகத்தை வாசிப்போம்: (1 கொரி. 15:1-4) அன்றியும், சகோதரரே, நான் உங்களுக்குப்பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள். நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றப்படி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே. நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, வேத வாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, 29. நீங்கள் நிச்சயமாகவே, ,''சகோ.பிரன்ஹாமே, அது ஒரு தாய்மார்கள் தின செய்திக்கு சற்றே வழக்கத்திற்கு மாறான ஒரு வேதபாகமாக இருக்கிறதே.,'' என்று கூறலாம். நல்லது, அது உண்மை தான். ஆனால், தேவன் வழக்கத்திற்கு மாறானவர் என்பது உங்களுக்குத் தெரியும், அவர் வழக்கத்துக்கு மாறான ஒரு வழியில் காரியங்களைச் செய்கிறவர். 30. நான் ,''தாய்,'' என்பதைக் குறித்த சிந்தனைகளைச் சிந்தித்துப் பார்க்கிறேன். தேவனுடைய கிருபையால், இன்று காலையில் எனக்கு ஒரு தாய் இருக்கிறார்கள், அவர்கள் இங்கே பூமியில் இன்னும் எங்களோடு இருக்கிறார்கள். நான் தாய்மார்களுக்காக நன்றி உள்ளவனாய் இருக்கிறேன். ஆனால் நாம் ஒரு சுகமளிக்கிற ஆராதனையையும் கூட கொண்டிருந்து, இன்றிரவு நான் மீண்டும் திரும்பி வருவேனா என்பதை அறியாமல் இருக்கிறேன், அதுவும் அன்றி நாம் ஒருக்கால் ஒரு வித்தியாசமான காட்சியை விளக்கமாக எடுத்துரைக்கலாமே என்று எண்ணினேன். 31. தாய் என்பவள் மிகவும் மகத்தானவள். இந்த ஜீவியத்தில் முதலாவது உங்களை ஏற்றுக் கொண்டவள் உங்களுடைய தாய் தான் என்பது உங்களுக்குத் தெரியும். யாருமே உங்களைத் தொட முடியாது, ஏனென்றால் நீங்கள் கர்ப்பந்தரிக்கப்பட்டீர்கள், அவள் தனது இருதயத்தின் கீழே உன்னை சுமக்கிறாள். உன்னை முதலாவது அறிந்தவள் அவள் தான், இந்த ஜீவியத்தில் உன்னை முதலாவது அணைத்தவளும் அவள் தான். அதன் பிறகு, நீ பிறந்த போது, உன்னைத் தொட்டு, உன்னுடைய கண்ணிலிருந்து வந்த கண்ணீரைத் துடைத்த முதலாவது கரங்களில் ஒன்று அவளுடைய கரம் தான். இந்த ஜீவியத்தில், முதலாவது உன்னை அன்பாகத் தட்டிக் கொடுத்து, உன்னை நேசித்து, செல்லமாக கொஞ்சினவள் உன்னுடைய தாய் தான். இப்பொழுது, நாம் ஒரு தாய்க்கு செலுத்துக் கூடிய போதுமான கனத்தை அவளுக்கு செலுத்துவது இல்லை என்று நினைக்கிறேன். 32. முதலாவது குழந்தையுடன் இருப்பவள் தாய் தான், அந்தக் குழந்தை என்னவாக இருக்கப் போகிறது என்பதைக் குறித்த ஒரு பெரிய பொறுப்பு அவளுக்கு உண்டு, அது அந்தக் குழந்தை பிரயாணம் பண்ண வேண்டிய பாதையில் தாய் அந்தக் குழந்தையை நடத்தத் துவங்குகிற விதத்தைப் பொறுத்தது. அந்தக் குழந்தையை சரியான பாதையில் வைக்கும்படி தேவன் இடம் இருந்து தாய்க்கு பொறுப்பு உண்டு. அக்காரணத்தினால் தான் தாய்மார்களுக்கு ஒரு விசேஷமான சிறு தொடுதல் இருக்கிறது என்று நினைக்கிறேன். 33. இந்தப் பட்டணத்திலுள்ள ஒரு பையனை எனக்குத் தெரியும். அவனுடைய தாயார் இப்பொழுது இங்கே இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவனுக்கு ஏறக்குறைய என்னுடைய வயது இருக்கும். ஆனால் அந்த தாயாரை புண்படுத்தும்படி நான் இதைக் கூறவில்லை; ஏனென்றால் எல்லா தாய்மார்களையும் போல, அவர்களுக்கும் போதுமான சஞ்சலங்கள் உண்டு. ஆனால் அந்தப் பையன் குடிக்கிறவன், அவன் அதிகமாக குடிக்கிறவன். அவன் மிக அதிகமாக குடிக்கிற போது, அவன் வீட்டிற்கு வந்து, தனது தாயாருடன் படுக்கையில் குதித்து, தன்னுடைய கரங்களை அவளைச் சுற்றிலும் போட்டுக் கொள்வான். அவனுக்கு பேரப்பிள்ளைகளும் இருக்கின்றனர். ஆனால் ஒரு தாய் அன்பாகத் தட்டிக் கொடுப்பதைக் குறித்து ஏதோ ஓன்று உள்ளது, வேறு எதுவும் தொடக்கூடியதைக் காட்டிலும் அது ஒரு - ஒரு வித்தியாசமான ஸ்தானத்தை எடுத்துக் கொள்வதாக காணப்படுகிறது; அதாவது, இந்த ஜீவியத்தில் அது அவ்விதம் காணப்படுகிறது, நான் மனுஷீகப் பிரகாரமாகப் பேசிக் கொண்டிருக்கிறேன். 34. உங்களுக்குத் தெரியும், மோசேயைப் போன்ற ஒரு மனிதன், அவன்... நான் அவனுடைய குணாதிசயத்திற்கு ஏதாகிலும் கௌரவம் (பாராட்டு) கொடுக்கக் கூடுமானால், தேவனால் அனுப்பப்பட்ட ஒரு தாயை அவன் கொண்டிருந்தது தான் அதற்குக் காரணம். யேகோபேத்தாகிய அவள் ஜெபித்திருந்தாள் என்றும், இந்தக் குழந்தைக்காக ஏங்கினாள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அவன் பிறந்த போது, அவனை செல்லமாக கொஞ்சி, அவனை அணைத்துக் கொண்டவள் அவள் தான், மேலும் அவள் நாணற்பெட்டியை உண்டு பண்ணி, அவளுடைய பரிதாபமான இருதயம் உடைக்கப்பட்ட போது, அவள் அவனை நாணல் புதர் செடிகளில் (bulrushes) வைத்தாள். அது அவளுடைய ஒரே சிறு குழந்தை, அது முழு உலகத்திலும் இருந்த குழந்தைகளிலேயே மிகவும் பிரமிக்கத்தக்க சிறு தங்கக்கட்டியாக இருந்தது. ஒரு தாய் எப்படியாக எந்த குழந்தையையும் நேசிக்கிறாள், ஆனால் இந்த விசேஷமான சிறு குழந்தையைக் காணும் போது... 35. அதன் பிறகு, அவன் ஒரு நோக்கத்துக்காகவே பிறந்திருக்கிறான் என்று அவள் தன்னுடைய இருதயத்தில் அறிந்திருந்தாள், அப்போது அவள் அவனை எடுத்துக் கொண்டு போய், வெளியே ஆற்றில் முதலைகள் இருக்கிற மிக மறைவான இடத்தில் அவனை வைத்தாள்... விசுவாசத்தினாலே அவள் அதைச் செய்தாள், தேவன் அவனைக் குறித்துப் பொறுப்பெடுத்துக் கொள்வார் என்பதை அவள் அறிந்திருந்தாள்; ஒரு தாயின் அன்பையும் அவளுடைய விசுவாச குணாதிசயத்தின் செயல்பாட்டையும் சுருங்கக் கூறுவதென்பது... விசுவாசம் தானே அதனால் காணக்கூடிய சறுக்கும் மணல்களின் மேல் வைக்கப்பட மாட்டாது; விசுவாசமானது தேவனுடைய நித்திய வார்த்தை ஆகிய அசைக்கப்படாத கன்மலையின் மேல் பயபக்தியோடு இளைப்பாறிக் கொண்டிருக்கும். ,''விசுவாசத்தினாலே அவள் அதைச் செய்தாள்,'' என்று வேத வாக்கியம் கூறுகிறது. 36. அலைகள் அந்த அஸ்திபாரங்களின் மேல் மோதியடித்து, மரணத்தை முகமுகமாய் நேராக நோக்கிப் பார்த்து, அது கொஞ்ச (காலமே) இருக்கும் என்பதை அறிந்திருந்து, விசுவாசத்தினால் கன்மலையின் மேல் அசையாமல் இருக்க முடிகிறது; அதுவுமல்லாமல், விசுவாசமானது அந்தக் கடலையும் தாண்டி, ,''நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்,,'' என்று கூறின அவரை நோக்கிப் பார்த்து, பலமாக வீசியடிக்கும் அந்த அலைகளின் சத்தத்தைக் கூட கேட்க மறுத்து விடும். 37. மோசேயின் தாய் அம்மாதிரியான விசுவாசத்தை தான் கொண்டிருந்தாள். அவள் அவனுக்குப் போதித்து, அவனைப் பார்வோனுடைய அரண்மனையில் வளர்த்தாள், அவன் ஒரு நோக்கத்துக்காகவே பிறந்திருக்கிறான் என்று அவனுக்குப் போதித்தாள், யேகோவா அவளுடைய ஜெபத்திற்குப் பதில் அளித்திருந்தார். மேலும் அவள்... அவனால் ஒரு சிறந்த ஆசிரியரைக் கொண்டு இருக்க முடியவில்லை. அது தான் மோசேயின் குணாதிசயத்தை (character) உருவாக்க உதவிகரமாய் இருந்தது. 38. ஆபிரகாம் லிங்கன் ஒருமுறை... இவ்விதமான ஒரு வாக்குமூலத்தை அளித்தார் என்று நம்புகிறேன். 39. இப்பொழுது, நான் ஜனநாயக கட்சியை சேர்ந்தவனோ அல்லது குடியரசு கட்சியை சேர்ந்தவனோ அல்ல. நான் வெறுமனே... நான் ஒரு கிறிஸ்தவன். ஒரு கட்சி மற்ற கட்சிக்கு விரோதமாக எதையும் கூற முடியாது என்று நினைக்கிறேன்; அது எல்லாமே லஞ்சம் ஊழலால் சீர்கெட்டுப் போயுள்ளது. ஆனால் என்னுடைய அபிப்ராயப்படி, ஆபிரகாம், லிங்கன்-களில் ஒருவராய் இருந்தார். அவர், வாஷிங்டன் மற்றும் அவரைப் போன்றவர்களோடு சேர்த்து, இந்த ஐக்கிய நாடுகள் எப்பொழுதும் கொண்டு இருந்ததிலேயே மிகச் சிறந்த ஜனாதிபதிகளில் ஒருவராயிருந்தார். 40. ஆபிரகாம் லிங்கன் ஒரு மோசமான துவக்கத்தைக் கொண்டிருந்தார். அவர் ஏழையாய் இருந்தார். வாஷிங்டனுக்கு இருந்ததைப் போன்று ஆபிரகாம் லிங்கனுக்கு கல்வியோ அல்லது ஏதோவொரு மகத்தான எதுவுமோ அல்லது பணமோ அல்லது அவருக்கு உதவி செய்யக்கூடிய ஏதோ காரியமோ இருக்கும் அளவுக்கு அவருக்கு எந்த பின்னணியும் இல்லாது இருந்தது. வாஷிங்டன், ஒரு கல்லூரி பட்டதாரியாக இருந்தார், மேலும் அவர்-அவர் அறிந்திருந்தார்; அவர் துவக்க முதலே ஒரு புத்திசாலியாகவும், ஒரு மகத்தான மனிதராகவும் இருந்தார். ஆனால் லிங்கனோ கென்டக்கியிலுள்ள பெரும் நிலப்பரப்பில் ஒரு சிறு மரக்கொட்டிலில் சிறு அறையில் (log cabin) வளர்ந்தார், அந்த சிறு பழைய அறையில் எந்த புகழுமின்றி வளர்ந்தார், அந்தப் பழைய அறையானது இப்பொழுது இங்கே லூயிவில்லில் ஒரு ஞாபகார்த்தமாக வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அவர் மகத்தான மனிதராக இருந்தார், சோளத்தைப் பயிரிடுவதற்காக, அவர் உழுத நிலத்தின் மேல் எழுதக் கற்றுக் கொள்ள வேண்டியதாய் இருந்தது... 41. ஆனால் நான் இதை வாலிப பிள்ளைகளிடம் கூறியாக வேண்டும். ஆபிரகாம் லிங்கன் தாம் 21 வயதைக் கடப்பது வரையில் தம்முடைய ஜீவியத்திலேயே வேதாகமத்தையும், ஃபாக்ஸ் எழுதிய இரத்தசாட்சிகளின் புத்தகத்தையும் தவிர வேறு எந்த புத்தகத்தையும் ஒரு போதும் சொந்தமாகக் வைத்திருக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா-? பாருங்கள்-? நீங்கள் எதை வாசிக்கிறீர்களோ அது தான் உங்களுடைய குணாதிசயத்தை உருவாக்குகிறது (molds)-! நாம் இன்று ஒரு கூட்டம் மட்டுமீறிய உணர்ச்சி வசப்படுகிறவர்களைப் (neurotics) பெற்றிருப்பதில் ஆச்சரியமில்லை. நம்முடைய செய்தித்தாள் விற்பனை செய்யும் கடைகளில் நாவல் கதை புத்தகங்களும், கீழ்தரமான முட்டாள்தனமான காரியங்களும் வைக்கப்பட்டுள்ளன. அவரோ வேதாகமத்தையும் ஃபாக்ஸ் எழுதிய இரத்தசாட்சிகளின் புத்தகத்தையுமே சொந்தமாகக் கொண்டிருந்தார். அது அவரை எவ்வாறு ஆக்கியது என்று பாருங்கள். 42. ஆனால் இவை எல்லாம் இருந்த போதிலும், ஒரு நாள் அவர் இவ்விதமாக ஒரு வாக்குமூலம் கொடுத்தார். அவர், ,''என்னிடத்தில் ஏதாகிலும் நல்ல காரியம் காணப்படக் கூடுமானால், அதற்குக் காரணம் தெய்வ பக்தியுள்ள ஒரு தாய் தான்,,'' என்று சொன்னார், அது தான் கர்த்தரை சேவிக்கும்படி அவரை வளர்த்த தாய். 43. நீங்கள் பாருங்கள், ஒரு பிள்ளை தன்னுடைய தாயைக் கவனிக்கிறான்; அந்தத் தாயைக் குறித்த ஏதோவொரு சிறு தொடுதல், அதை தான் ஒரு பிள்ளை கவனிக்கும். அதற்கு வலிக்கும் போது, அது தகப்பனிடம் போவதற்கு முன்பாக ஆறுதலடையும்படி தாயிடம் தான் போகும். ஏனென்றால் அவள் தான் அந்தப் பிள்ளையோடு முதலாவது இருந்தவள் என்பது உங்களுக்குத் தெரியும். தேவன் அவ்விதமாக இருக்கும் ஒரு தாயைக் கொடுப்பதென்பது ஒரு வெகுமதியாய் இருக்கிறது; நான் ஒரு உண்மையான தாயைத் தான் குறிப்பிடுகிறேன். இப்பொழுது, தாய்மார்கள் கனத்திற்கு உரியவர்களாகவும் தெய்வ பக்தியுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். 44. ஆனால் ஜனங்களிடமிருந்து பணம்பறிக்கும் இந்த வியாபார யுக்திகளைப் போல, தாய்மார்களின் தினம் போன்ற நாட்களிலும், அவர்கள் மலர்களைக் கொண்டும் மற்ற காரியங்களைக் கொண்டும் அதிக பணம் சம்பாதிக்கிறார்கள் என்று நம்புகிறேன். ஆனால் தாய்மார்களின் தினம் அனுதினமும் இருக்க வேண்டும், தாய்மார்களின் தினத்தில் ஒரு கொத்து மலர்களை அவளுக்கு அனுப்புவதல்ல, ஆனால் வருடம் முழுவதும் 365 நாட்களும் பகலிலும் இரவிலும் நீங்கள் அவளை நேசித்து அவளைக் கவனித்துக் கொள்ள வேண்டும். ஆனால், நிச்சயமாகவே, வர்த்தக உலகமானது இவ்விதமாக காரியங்களை அதிகமாக கட்டுக்குள் வைத்திருக்கிறது, அது தாயானவளை அவமதிக்கிறது. ,''ஓ, நல்லது, சென்ற தாய்மார்கள் தினத்தில், நான் அவளுக்கு ஒரு மலர்கொத்து அனுப்பினேன்.,'' 45. அவள் இன்னும் அதிகமாக பாராட்டப்பட வேண்டியவள், நீங்கள் உட்கார்ந்து அவளோடு சிறிது நேரம் பேசி, அவளுக்கு ஒருவரி எழுதுங்கள், அவளுடைய முதுகில் அன்பாகத் தட்டிக் கொடுத்து, அவளுடைய கன்னத்தில் முத்தமிட்டு, நீங்கள் அவளை நேசிக்கிறீர்கள் என்பதை அவளுக்குக் கூறுங்கள். நீங்கள் பூ வியாபாரிகள் இடமிருந்து வாங்கக் கூடிய மலர்கள் யாவற்றைக் காட்டிலும் அது அதிக தூரம் தொடரும். அது உண்மை. 46. அது பத்து கட்டளைகள் (Ten Commandments) என்று நம்புகிறேன், அந்தப் படத்தை எழுதி திரையிட்டவர் காலஞ்சென்ற செசில் டிமெய்ல் (Cecil DeMille) என்பவர், அது திரைப்பட உலகத்திலேயே தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாகும். அதை திரையிடுவதற்கு முன்பு, அல்லது அதை வெளியிடுவதற்கு முன்பு, செசில் டிமெய்ல் அவர்கள் ஓரல் ராபர்ட்ஸ்யும், டீமாஸ் சகரியானையும், ஒரு கூட்டம் முழு சுவிசேஷ ஊழியக்காரர்களையும் அழைத்து, தமக்கு சொந்தமான ஸ்டுடியோவிற்குள் கூட்டிச் சென்று, பத்து கட்டளைகள் திரைப்படத்தை நான்கு மணி நேரங்கள் காண்பித்து, அதைக் குறித்த அவர்களுடைய அபிப்ராயத்தை அவர்களிடம் கேட்டார். அவருடைய தீரமான ஆத்துமாவை தேவன் இளைப்பாறப் பண்ணுவாராக. 47. நான் அதைப் பார்த்த போது, அதைக் கவனித்துக் கொண்டிருந்தேன், ஒரு சிறு கருத்து எப்போதுமே என்னைத் திகைப்படையச் செய்தது. உங்களில் பலரும் அதைப் பார்த்து இருப்பீர்களானால், அது எப்போது என்றால் பார்வோனுடைய குமாரத்தி... மோசே தான் ஒரு எபிரேயன் என்பதைக் கண்டு கொண்ட பிறகு, அவன் தன்னுடைய ஜனங்களோடு வாசம் பண்ண சென்று விடவேண்டும் என்று தீர்மானித்திருந்தான். ஒரு காலத்தில் அழகான தோற்றத்துடன் இருந்த அவனுடைய தாயார், அங்கே நலிந்து போய், நரைத்த தலையுடனும், வயதானதால் முகத்தில் தோல் சுருக்கத்துடனும் பழைய கை வைப்பதற்கான வசதி கொண்ட நாற்காலியில்(armchair) அமர்ந்து இருக்கிறாள். இயல்பான குணாதிசயத்தைக் கொண்ட ஒரு தாய். அப்போது பார்வோனு டைய குமாரத்தி உள்ளே வருகிறாள். அவன், ,''எப்படி இருந்தாலும், நான் யாருடைய மகன்-?,'' என்று கேட்கிறான். 48. யேகோபேத் தான் அவனுடைய உண்மையான தாய் என்பது வெளிச்சத்திற்கு வந்த போது, பார்வோனுடைய குமாரத்தி, பூசப்பட்ட தன்னுடைய வர்ணத்தோடும், மற்றவைகளோடும் எல்லாவற்றையும் ஆயத்தப் படுத்திக் கொண்டு, அவள், ,''ஆனால், இதைக் கவனி-! அவன் உன்னுடைய மகனாக இருக்கலாம்,,'' என்று கூறி விட்டு தொடர்ந்து, ஆனால், ,''நான் அவனுக்கு செல்வத்தையும் சீர்சிறப்புகளையும் கொடுத்திருக்கிறேன். உன்னால் அவனுக்கு சேற்றுக் குழிகளைத் தவிர வேறெதையும் கொடுக்க முடியவில்லையே,,'' என்றாள். 49. ஆனால் வயது சென்ற தலைநரைத்த அந்த தாய், ,''ஆனால் நான் அவனுக்கு ஜீவனைக் கொடுத்தேன்,,'' என்று கூறினாள். அது தான் வித்தியாசத்தை உண்டு பண்ணுகிறது. ,''நான் அவனுக்கு ஜீவனைக் கொடுத்தேன்.,'' தேவன் அவனுக்கு நித்திய ஜீவனைக் கொடுத்தார். தாயே, அது எவ்வளவு உண்மை. 50. சில சமயங்களில் ஜனங்கள் என்னைப் பார்த்து, நான் எப்போதுமே பெரும் பாலும் என்னுடைய கூட்டங்களில், தொடர்ந்து உயிர்த்தெழுதலின் பேரிலேயே பிரசங்கித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறுகின்றனர். நான் இக்காலையில், 1.கொரி-!5ம் அதிகாரம் 4-வது வசனத்திலிருந்து உயிர்த்தெழுதலின் பேரிலான ஒரு வேத பாகத்தை வாசித்தேன். 51. ஆனால் நீங்கள் பாருங்கள், அவர்கள் இன்று தாயை வைக்கிற விதம் என்னவென்றால், ஒருக்கால் வயதாகி, எழும்ப முடியாமல், தளர்ந்து போனவர்களாய், தலை நரைத்து, சுருக்கம் விழுந்து, கைகளை வைத்துக் கொள்வதற்கு வசதியான ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டிருக்கும் ஒரு வயதான சீமாட்டியின் அருகில் ஒரு மலர் கூடையை (வைத்து) இருப்பது தான். அது முற்றிலும் உண்மையாகும். ஆனால் நான் என்னுடைய முக்கிய விஷயத்தை எடுத்து தாய் என்றால் என்ன என்பதைக் குறித்த வேறொரு காட்சியை உங்களுக்கு வரைந்து காட்ட விரும்புகிறேன். 52. யாரோ ஒருவர், ,''நீர் உயிர்த்தெழுதலின் பேரில் மிக அதிகமாகப் பிரசங்கம் பண்ணுகிறீரே. பெரும்பாலும் எல்லா செய்திகளுமே உயிர்த்தெழுதலைக் குறித்த ஏதோவொன்றைக் கொண்டிருக்கிறது,,'' என்றார். 53. ஏன், நிச்சயமாக-! அது-அது சுவிசேஷத்தின் முக்கிய இளைப்பாறும் ஸ்தலமாக உள்ளது. அவர் (இயேசு-மொழிபெயர்ப்பாளர்.) என்ன செய்து இருந்தாலும் காரியமில்லை, அவர் மீண்டும் மரித்தோரிலிருந்து உயிர்த்து எழுந்திராவிட்டால், இவை அனைத்துமே வீணாயிருக்கும். அவர் தேவன் என்பதை அது எனக்கு நிரூபிக்கிறது. அவர் உரிமை கோரிய ஒவ்வொரு உரிமையையும் அது நிரூபிக்கிறது: அந்த உயிர்த்தெழுதல்-! மேலும் அது ஆத்துமாவின் இளைப்பாறும் ஸ்தலமாகவும் உள்ளது. அதுவே பிரயாணம் துவங்கும் இடமாக உள்ளது. அது நம்முடைய ஆறுதலின் முடிசூட்டுதலாக உள்ளது. 54. அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததை நாம் காணும்போது, யுத்தம் செய்வதற்கான ஸ்தானத்தை எடுத்துக் கொள்ளும்படிக்கு, அது நம்மை சுவிசேஷ போர் கவசங்களோடு யுத்த களத்தின் முன்னணியில் வைக்கிறது. அவர், ,''என்னிமித்தம் தன் ஜீவனை இழந்து போகிறவன் மீண்டும் அதைக் காத்துக் கொள்வான் (மத்தேயு 10:39),,'' என்று கூறினார் என்பதை நாம் அறிவோம். 55. அது முழு சுவிசேஷத்தின் மகத்தான முடிசூட்டு விழாவாக இருக்கிறது என்று நினைக்கிறேன், அது தான் உயிர்த்தெழுதல், அதில் நம்பிக்கையாய் இருப்பவர்களுக்கு அது கொடுக்கிற அதன் தெய்வீக வாக்குத் தத்தங்களும், அந்த ஆறுதலும் அவ்வாறே இருக்கிறது. அது மீண்டும் நாம் ஒன்றாக சேர்க்கப்படுதலைக் குறித்த மகத்தான சந்திப்பை வாக்குப் பண்ணுகிறது. சகல பாவங்களும் மங்கி மறைந்து போய் விடும் என்பதை அது வாக்குப் பண்ணுகிறது. இதில் நாம் கொண்டிருந்த எல்லா குறைபாடுகளும் எல்லா வேதனைகளும் மறைந்து போய் விடும் என்பதை அது வாக்குப்பண்ணுகிறது. இந்த ஜீவியத்தில் நாம் இதனூடாகக் கடந்து செல்ல வேண்டியிருந்தது, அதன் பிறகு நம்முடைய எல்லாமே மறைந்து போய் விடும் என்று அது வாக்குப் பண்ணுகிறது. மரணமும் கூட தன்னுடைய பிடியை விட்டு விடும் என்று அது வாக்குப் பண்ணுகிறது, நாம் இயேசுவின் சாயலில் (likeness) உயிர்த்து எழுவோம். எனவே, என்னுடைய அபிப்ராயத்தின்படி, வேத வாக்கியத்திலுள்ள எல்லா வாக்குத்தத்தங்களிலும் உயிர்த்தெழுதலே பெரிய வாக்குத்தத்தமாக இருக்கிறது. அங்கே தான் அது முத்திரை இடப்பட்டுள்ளது. 56. கடந்த ஈஸ்டரின் போது, நான் ஐந்து காரியங்களின் பேரில் பிரசங்கித்துக் கொண்டு இருந்தேன்... அவர் உயிரோடிருந்து என்னை நேசித்தார்; மரித்து என்னை இரட்சித்தார்; அடக்கம் பண்ணப்பட்டு, அவர் என் பாவங்களை சுமந்து தொலைவில் அகற்றினார்; உயிரோடெழுந்து இலவசமாக என்னை என்றென்றைக்குமாக நீதிமானாக்குகிறார். 57. அது தான் எனக்கான நாள், நாட்களில் எல்லாம் மகத்தான நாள் அதுவே-! நாட்களிலெல்லாம் ஆசீர்வதிக்கப்பட்ட அந்த நாளுக்காக நாம் பிரசவ வேதனைப்பட்டு, காத்துக் கொண்டு இருக்கையில், அந்த உயிர்த்தெழுதல் நம் எல்லாருக்கும் எவ்வளவு முக்கியமானதாக இருக்கும் என்பதைப் பார்க்கும் போது-! 58. ஏதோவொரு நாளில், இந்த வயது சென்ற பெலவீனமான, மெலிந்த, தலை நரைத்த, வலுவிழந்த தாய்மார்கள் மறுரூபமடைவார்கள் என்ற வாக்குத் தத்தத்தை அது நமக்குக் கொடுக்கிறது. அங்கே அமர்ந்திருக்கும் தாய் மட்டும் அல்ல, அவள் மட்டுமல்ல, அவளோடு கூட அவளுடைய முழுக் குடும்பமும் மறுரூபமாகி விடும். 59. அந்த நாள் எப்படிப்பட்ட ஒரு நாளாக இருக்கும்-! நாம் மிகவுமாக நேசித்த அந்த முகங்களை நாம் காணும் போது, அது என்னவொரு நேரமாக இருக்கும். அந்தக் காலையில், நாம் நம்முடைய அன்பார்ந்தவர்களைக் கண்டு, அவர்கள் அப்போது எப்படி இருப்பார்கள் என்பதைக் கவனிக்கும் போது, அது என்னவொரு வித்தியாசமாக இருக்கும். அப்போது எல்லா சஞ்சலங்களும் நீங்கிப் போய் விடும். கடினமான துன்பங்கள் எல்லாம் சரியாகி விடும். மரணத்தின் வெளிறிப் போன கன்னங்கள் அதற்கு மேலும் இருக்காது. கண்களில் இருந்து சொரியும் கண்ணீர் அதற்கு மேலும் இருக்காது. உயிர்த்து எழுதலானது அவை எல்லாவற்றையுமே வாக்குப் பண்ணுகிறது. அங்கே அடக்க ஆராதனைகள் அதற்கு மேலும் இருக்காது. ஈமச் சடங்குகளைச் செய்பவர் (undertaker) மரித்த சரீரத்திற்குத் தைலமிட்டு, அதை வெளியே இழுத்து, அது இயற்கையாக தோற்றமளிக்கும்படி அதற்கு வர்ணம் தீட்டவும் மற்ற காரியங்களைச் செய்யும் இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு துண்டு கல்லைப் போல குழந்தையின் கன்னத்தில் தட்டிக் கொடுப்பது அதற்கு மேலும் இருக்காது. அது அங்கே மீண்டும் ஒருபோதும் தேவைப்படாது. 60. அப்போது, அங்கே நின்று கொண்டிருக்கும் நம்முடைய அன்பார்ந்தவர்களை யும், நம்முடைய தாய்மார்களையும், நம்முடைய இனஜன பந்துக்களையும் (kindred), நம்முடைய நண்பர்கள் எல்லாரையும் காணும் அந்த வேளையைக் குறித்து நான் எண்ணிப் பார்க்கிறேன்; நாம் அவர்களை, அவர்களுடைய அழியாமையின் சரீரங்களிலும், அவர்களுடைய வானத்திற்குரிய சரீரங்களி லும் கண்டு, அவர்களுடைய குணாதிசயத்தைக் கவனித்து, அவர்கள் எப்படியாக, இனிமையோடும், அமரிக்கையோடும் நடந்து கொள்கிறார்கள் என்பதைக் காணும் போது. அதற்கு மேலும் பதட்டமோ அல்லது ஏமாற்றங்களோ இருக்காது. அவர்கள் அப்போது கர்த்தராகிய இயேசுவின் சாயலில் நின்று கொண்டிருப்பதைக் காணும் போது, அது ஒரு அற்புதமான நாளாக இருக்கும். 61. நாம் அவர்களை சந்திக்கும் அந்த ஆறுதலின் வேளைக்காக நாம் ஒவ்வொருவரும் நம்முடைய உள்ளங்களில் அதை எதிர் நோக்கியவர்களாய் ஏங்கிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவரும் தங்கள் அன்பார்ந்தவர்களைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள், ஒருக்கால் மரித்துப் போய் விட்ட தங்கள் தாயைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கலாம். நீ மீண்டும் அவளைக் காணும் போது, அது எப்பேர்ப்பட்ட ஒரு நாளாக இருக்கும்-! அப்பாவுக்கும், சகோதரனுக்கும், அன்பார்ந்தவர்கள் எல்லாருக்கும் அது எப்பேர்ப்பட்ட ஒரு நாளாக இருக்கும்... 62. இப்பொழுது, நானும் கூட சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். நான் என்னுடைய குடும்பத்தினரைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறேன், அந்த நாள் எனக்கு எவ்வளவு முக்கியம் வாய்ந்ததாய் இருக்கும். 63. அநேகமாக அந்த உயிர்த்தெழுதல் காலையில் என்னை முதலாவது சந்திக்க வருவது என்னுடைய சிறு ஷாரோனாய் இருக்கும் (Sharon) என்று நினைக்கிறேன். இல்லை, அவள் நடுங்கிக் கொண்டிருக்க மாட்டாள். அந்தப் பிசாசு அவ்விடத்தில் நுழைய முடியாது. எந்த மூளைக்காய்ச்சலும் அந்த தேசத்தை ஒரு போதும் தொடவே முடியாது. அவள் என்னைப் பார்த்து, போய் வருகிறேன் (good-bye) என்று கையசைக்க மாட்டாள். அவள் தன்னுடைய கரங்களை (என் மேல்) போட்டுக் கொண்டு, ,''அப்பா-!,'' என்று உரத்த சத்தம் இடுகையில், அந்தச் சிறு நீலநிற கண்கள் பளிச் பளிச்சென்று பிரகாசித்துக் கொண்டு இருக்கும். நான் அவளைக் கண்டு, அவள் மீண்டும் ஒரு போதும் மரிப்பதில்லை என்பதை அறிந்து கொண்டு, அதெல்லாம் முடிந்து விட்டது என்பதை அறிந்து கொள்ளும் போது, மகிழ்ச்சியடைவேன், அதனால் தான், நான் உயிர்த்தெழுதலைக் குறித்து மிகவும் கடினமாகப் பிரசங்கித்தேன். 64. அதன் பிறகு நான் அவளுடைய தாயாரைக் காண்பேன், அது என்னுடைய மகன் பில்லியின் தாயார். நான் தொடர்ந்து நீண்ட நேரமாக அங்கே அதைக் குறித்த நினைவுகளை அதிகமாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். இங்கே மேலே இருக்கும் திரு.காம்ப் அவர்களைக் கொண்டு, நான் அவளைத் தூக்கிக் கொண்டு வந்ததை நினைவு கூறுகிறேன், அவர் கடைசியாக அவளை வைத்து ஓட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தார், நான் அவளைத் தொடர்ந்து ஒரு காரில் சென்று கொண்டிருந்தேன். 65. நாங்கள் அங்கே 7-வது தெருவில் போன போது, 18 மாத (குழந்தையாகிய) பில்லியை அவர்கள் எப்படியாக வெளியே தெருவில் கொண்டு வந்து, அவள் அவனைக் காணும்படி செய்தார்கள். அவள் படுத்துக் கொண்டே கதறி அழுதபடி அவளுடைய குழந்தையை உற்று நோக்கினாள், ஆனால் அவளால் அவன் அருகில் போக முடியவில்லை. 66. அதன் பிறகு ஈமச்சடங்கு பொறுப்பாளர் (undertaker) சாலையினூடாக வந்து, ஏழாவது தெருவுக்குப் போனார். அந்நேரத்தில் இங்கிருக்கும் அம்மா தான் அவனைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள், அவன் ஒரு ஜோடி சின்னஞ்சிறு குட்டையான காற்சட்டைகளை (pants) அணிந்தபடி, ஒரு சிறு சிவப்பு நிற தொப்பியை பக்கவாட்டில் இழுத்தபடி அவனுடைய தலையில் அணிந்து கொண்டும் வெளியே முற்றத்தில் நின்று கொண்டிருந்தான். அந்தத் தாய் அந்த ஆம்புலன்ஸின் பின்பகுதியில் இருந்த அக்கட்டிலின் மேல் படுத்தபடி என்னைக் கவனித்துக் கொண்டிருந்தாள், அவள் தன்னுடைய பிள்ளை முற்றத்தில் நின்று கொண்டிருப்பதைக் கண்ட போது, அவள் தன்னுடைய கடைசி பிரயாணத்தைச் செய்து கொண்டிருக்கிறாள் என்பதை அறிந்து, அவள் அந்தக் கட்டிலிலிருந்து எழுந்து உரத்த சத்தமிட்டு, முற்றத்தில் இருந்த தன்னுடைய பிள்ளையை நெஞ்சார அணைத்துக் கொள்ளும்படி எலும்பும் தோலுமாயிருந்த தன்னுடைய கரத்தை வெளியில் போட்டாள். ஆனால் அவளால் அவனை அணைத்துக் கொள்ள முடியவில்லை. 67. ஓ, அந்நாளில் அவளைக் காண்பது சந்தோஷமாக இருக்குமே. இல்லை, அவள் எலும்பும் தோலுமான கரங்களைக் கொண்டிருக்க மாட்டாள், அந்தக் கன்னங்கள் மூழ்கிப் போவதுமில்லை. ஆனால் அவள் வானத்தின் ஒரு இராணியாக (a queen of heaven), ஒரு தாயாக, தெய்வீக அழகைக் கொண்டவளாய் நிற்பாள். அவளுடைய கறுத்த கண்கள், அண்டங்காக்கைகளின் சிறகுகளைப் போன்று அவ்வளவு கறுப்பாயிருந்து, சந்தோஷத்தால் பளிச் பளிச்சென்று பிரகாசித்துக் கொண்டிருக்கும். அவள் சரீரம் எல்லாம் கூனிப் போகாது, அங்கே அந்த காச நோய் பிசாசு ஒரு போதும் அந்த தேசத்திற்குள் நுழைவடு இல்லை, ஆனால் அவள் அழிவில்லாதவளாய் அவருடைய சாயலில் நிற்பாள். 68. அதன் பிறகு, அடுத்ததாக என்னைச் சந்திக்க வருவது எட்வர்ட்டாக இருக்கும் என்று நினைக்கிறேன், நாங்கள் அவனை ,''ஹம்பி,,'' என்று சுருக்கமாக அழைப்போம். பிரன்ஹாம் குடும்பத்தின் ஒன்பது பெரிய இணைப்பு சங்கிலிகளில் அவன் தான் முதலாமவன் ஆவான். உடைக்கப்பட்டு போன முதலாவது இணைப்பு அவன் தான்; அவன் எனக்கு அடுத்தவன். எட்வர்ட் என்னை நோக்கி ஓடி வருவதை நான் காண்பேன். அவன் 19 வயதில் ஒரு இளைஞனாக மரித்த போதிலும். நான் அவனுடைய கரத்தைப் பற்றிப் பிடிக்கும் போது, நாங்கள் சிறு பையன்களாய் இருந்த போது நடந்தவைகளைக் குறித்துப் பேசுவதற்கு எங்களுக்கு அதிக காரியங்கள் இருக்கும் என்பதில் நிச்சயம் உடையவனாய் இருக்கிறேன், ஏனென்றால் நாங்கள் சிநேகிதர்களாய் இருந்தோம், நாங்கள் ஒன்றாக ஒட்டிக் கொண்டு இருந்தோம். உண்மையான சகோதரர்கள் செய்வதைப் போன்று, நான் அவனுடைய சூட்டையும் காரியங்களையும் அணிந்து கொள்ள அவன் அனுமதிப்பான். நான் அவனை மீண்டும் காணும் போது, அது ஒரு சந்தோஷமாயிருக்கும். 69. அவன், ,''பில்லி, என்னுடைய செய்தி உனக்குக் கிடைத்ததா-? நான் இவ்வுலகத்தை விட்டுப் போய்க் கொண்டிருந்த சமயத்தில், நீ ஒரு கால்நடைப் பண்ணையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாய். ஆனால் நான் மருத்துவ மனையில் இருந்த போது, ,''எல்லாமே சரியாக உள்ளன என்று பில்லியிடம் கூறி விடுங்கள்,,'' என்று நான் செய்தி அனுப்பி இருந்தேனே,,'' என்று இவ்விதமாக ஏதோவொன்றைக் கூறுவதை நான் கேட்பேன். நானோ, ,''ஆமாம், அந்தப் பரந்த புல்வெளியில் இருக்கும் போது, உன்னுடைய செய்தி எனக்குக் கிடைத்தது,,'' என்று கூறுவதற்கு மகிழ்ச்சியாய் இருப்பேன். 70. அதன் பிறகு, அடுத்ததாக வருவது என்னுடைய தகப்பனாராக இருக்கும் என்று நினைக்கிறேன். அறுந்து போன அடுத்த இணைப்பு அவர் தான். இல்லை, அடுத்த இணைப்பு சார்லஸ் என்று நினைக்கிறேன், அவன் ஒரு வாலிப சகோதரனாய் இருந்தான். 71. அவன் வெறுமனே ஒரு சிறு பையனாய் இருந்த போது, அவனுக்கு ஒரு மோட்டார் வாகன விபத்து ஏற்பட்டது. அவன் எப்போதுமே நடக்கும் போது, அவனுடைய வலது காலை இழுத்து இழுத்து நடப்பான். ஆனால், உங்களுக்குத் தெரியும், நான் அவனைக் காணும் போது, அவன் அந்தக் காலை இழுத்து வைத்து நடக்க மாட்டான். அதெல்லாம் சரியாகி, ஒரு வாலிப மனிதனின் மகிமையோடு நின்று கொண்டிருப்பான். 72. அவன் புன்சிரிப்போடு இவ்விதமான ஏதோவொன்றை என்னிடம் கூறுவான். அவன், ,''ஆமாம், பில்லி, இங்கே எந்த விபத்துமே இல்லை. எனக்கு மோட்டார் வாகன விபத்து ஏற்பட்டதற்கு முந்தின இரவு எனக்கு ஞாபகம் இருக்கிறது, அன்று இரவு நீ என்னிடம் பேசினாய், அப்போது நம்முடைய சிறிய தாழ்மையான வீட்டின் சிறு வளைவு பகுதியில் நின்று கொண்டு இருந்தாய்,,'' என்று கூறுவான், நான் இப்பொழுதே அதன் உச்சியை கவனித்துக் கொண்டிருக்கிறேன். ,''நான் போவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பு, நீ கர்த்தரைக் குறித்து என்னிடம் பேசினாய். நான் போகும் போது, நீ பிரசங்க பீடத்தில் இருந்து பிரசங்கித்துக் கொண்டிருந்தாய்,,'' என்று கூறுவான். 73. அதன்பிறகு அப்பா வருவார். ஓ, நான் அவரைக் காணலாம். அவர் எனக்கு அதிக கடினமான சவுக்கடிகளைக் கொடுத்த போதிலும், சரியாக அது தான் எனக்குத் தேவையாய் இருந்தது. ஆனால் நான் அடர்த்தியான அந்தக் கருமையான அலை அலையான முடியைக் காண்பேன், எப்பொழுதும் இருந்ததைக் காட்டிலும் அவர் அந்நாளில் அதிகப் பிரகாசமாக இருப்பார். அவர் என்னை நோக்கிப் பார்த்து, ,''என் மகனே, உனக்குத் தெரியும், அப்பா அவருடைய பிள்ளைகளைப் போஷிக்கும்படி இனி மேல் ஒரு போதும் பசியோடு மேஜையை விட்டு எழுந்திரிக்க மாட்டார், இங்கே எங்களுக்கு நிறைய உள்ளது. இங்கே ஒரு போதும் வறுமையே இருப்பதில்லை,'' என்பார். 74. அவரைக் காணும்போது, அவர் ஒரு நாளைக்கு ஐம்பது அல்லது 75 சென்ட் காசுகளுக்கு (cents) வேலை செய்து, பிள்ளைகள் சாப்பிட வேண்டுமென்று (சாப்பாட்டு) மேஜையை விட்டு எழுந்து, மீண்டும் வேலைக்குத் திரும்பிச் செல்வார்... அவருடைய சட்டையின் பின்பக்கம் அதிகமாக சூரிய ஒளி பட்டதினால் எரிந்து போகும் அளவுக்கு அவர் மிகவும் கடினமாக வேலை செய்தார், அம்மா அதை ஒரு கத்தரிக்கோலைக் கொண்டு வெட்டுவார்கள். 75. அவர் இவ்விதமாக ஏதோவொன்றைக் கூறுவதைக் நான் கேட்பேன், ,''பில், நான் மரித்துக் கொண்டிருந்த போது, நீயும் சகோதரன் ஜார்ஜ்-ம் எனக்காக ஜெபிக்க வந்த அந்த இரவு உனக்கு ஞாபகம் உள்ளதா-? இரண்டு வெண்ணிற தூதர்கள் படுக்கைக்கு அருகில் நின்று கொண்டிருக்கிறார்கள் என்றும், கால் பக்கத்தில் ஒரு சிவப்பு நிற தூதன் நின்று கொண்டிருக்கிறான் என்றும் நான் அம்மாவிடம் கூறினேன் என்று உனக்குத் தெரியும். சிவப்பு நிற தூதன் என்னைப் பிடிக்க முயற்சித்துக் கொண்டு இருந்தான், ஆனால் அந்த வெண்ணிற தூதன் இடையே நின்றானே. கடைசியாக அவர்கள் என்னை வீட்டிற்குக் கொண்டு சென்றார்களே,'' என்று கூறுவார். 76. மேலும் அதன் பிறகு, அறுந்து போன அடுத்த இணைப்பு, அல்லது மரித்துப் போன ஹவார்டு வருவான். நான் ஹவார்டைக் காண்பேன்; நாங்கள் அத்தேசங்களில் ஒன்றாக நெருங்கிய நண்பர்களைப் போல வசித்த போது, எல்லா இடங்களிலும் அவன் ஒரு ஊழியக்காரன் என்று அழைக்கப்பட்டான், அவனுக்கு பெரிய தனித்தன்மை (personality) இருந்தது, ஆனால் அவனுடைய கூட்டாளிகள் அவனை நிராகரித்து விட்டனர். நான் அவனிடம் பேசின கடைசி வார்த்தை, அவன், ''நான் போகும் போது, பில்...,'' என்றான். 77. அவன் மரித்துப் போவதற்கு ஏறக்குறைய நான்கு வருடங்களுக்கு முன்பு, ஒரு தரிசனத்தின் மூலம், அவன் மரித்துப் போவதை நான் கண்டேன். பாப் (Pop) அவர்கள் அவனுடைய கல்லறையை அடையாளமிடுவதை நான் கண்டதாக அவனிடம் கூறி, அது தான் அடுத்தது என்று கூறினேன். 78. அவனோ, ''நீ எனக்காக செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிற ஒரு காரியம் உண்டு. நான் என்னுடைய ஜீவியத்தை ஒழுங்கீனமாகக் குழப்பி விட்டு இருக்கிறேன். நான் விவாகம் செய்தும் மற்றும் ஒவ்வொரு காரியத்தையும் செய்தும் இருக்கிறேன். என்ன நடந்தது என்றே எனக்குத் தெரியவில்லை,'' என்றான். நான், ''ஹவார்டு, நீ அவரை விசுவாசிக்கிறாயா-?,'' என்று கேட்டேன். 79. அவன், ''எனக்குள் இருக்கிற எல்லாவற்றைக் கொண்டும் நான் அவரை விசுவாசிக்கிறேன்,'' என்றான். அவன் போவதற்கு ஏறக்குறைய இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு, அவன் தேவனோடு சமாதானம் செய்து கொண்டான், சகோ.நெவிலும், அவர்களும் அங்கே இருந்தார்கள். அவன், ''நீ ஒரு காரியத்தை செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன். பில்லி, நான் போகும் போது, அவர்கள் எனக்காக, ''அவர் புரிந்து கொண்டு, ''நன்றாய் செய்தாய், என்று கூறுவார்,'' என்ற பாடலைப் பாட வேண்டும்,'' என்றான். 80. நான் ஹவார்டின் கரத்தைக் குலுக்குவதற்கு முன்பு என்று நம்புகிறேன், அவன் நிறுத்தி விட்டு, என்னை நோக்கிப் பார்த்து, ''பில்லி, அவர் புரிந்து கொண்டார்,'' என்று கூறுவதை நான் கேட்பேன். 81. அதன் பிறகு, சகோ.சிவார்டும், சகோ.ஃபிராங்க் பிராயும், சகோ.ஜார்ஜ் டீ ஆர்க்கும் வருவார்கள். ஓ, உயிர்த்தெழுதல் எனக்கு மிக முக்கியமானது. அந்த மகத்தான முடிசூட்டப்படும் வேளைக்காக நான் எதிர்நோக்கிக் கொண்டு இருக்கிறேன். அதன் பிறகு வெளிச்சமானது பரவத் துவங்கும் போது, நாம் அறிந்து இருக்கிறபடியே அறிந்து கொள்வோம். நாம் புரிந்து கொள்வோம், நமக்கு அறிமுகமானவர்களையும், அங்கேயிருப்பவர்களையும் நாம் நினைவு கூறுவோம். 82. மேலும் அநேகர் அங்கேயிருப்பார்கள் - அங்கே இருப்பார்கள் என்று நாம் நினைத்துக்கூட பார்த்திராத அநேகரும் அங்கே இருப்பார்கள். ''தொல்லைக ளுக்கு உட்பட்ட மனிதத் தண்ணீர்களின் (human troubled waters) மேல் போடப்பட்ட ஆகாரம் அந்நாளில் நம்மிடம் திரும்பி வரும்,'' என்று நான் விசுவாசிக்கிற அந்நேரம் அதுவாக இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். ஜனங்கள் மேலுள்ள நம்முடைய சாட்சியைக் கேட்பவர் உள்ளத்தில் ஏற்படும் விளைவைப் பொறுத்து அவர்களுடைய நடவடிக்கை என்னவென்பதை நாம் புரிந்து கொள்ளாமல் இருப்பதை நாம் காணும் போது, அவர்கள் அங்கே இருப்பது சாத்தியம் தான். அது என்னவொரு நாளாக இருக்கும்-! 83. மேலும், அப்போது, நாம் விதைத்த விதைகள், அவர்கள் என்ன ஆவார்கள் என்று நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டோம், ஆனால் இதோ அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் விலையேறப்பெற்ற கனிகளைத் தந்தார்கள், நாம் அந்நாளில் அவர்களைக் காண்போம், கீழ்ப்படியாத பிடிவாதமுள்ள (wayward) அன்பார்ந்தவர்களையும், உறவினர்களையும் நாம் அந்நாளில் காண்போம். 84. மனந்திரும்பினவர்களாய் நான் கண்ட ஆயிரக் கணக்கானோர்களைக் குறித்து எண்ணிப் பார்க்கிறேன், ஆம், இப்பொழுது மில்லியன் கணக்கானோர் (இலட்சக்கணக்கானோர், 1 மில்லியன் என்பது 10 இலட்சமாகும் - மொழி பெயர்ப்பாளர்) மனந்திரும்பிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களின் ஊழியம் என்னவாக இருந்தது. ஓ, அது ஒரு உயிர்த்தெழுதலைக் காட்டிலும் அதிகமான பேரை எடுத்துக் கொள்ளும். சுற்றிலும் போய் கரங்களைக் குலுக்கவும், நான் இப்பொழுது அறிந்திராத காரியங்களை அறிந்து கொள்ளவும் ஒரு நித்தியத்தையே அது எடுத்துக் கொள்ளும். 85. நீங்கள் இன்று அந்த வெள்ளை நிற மலர்களை அணிந்திருக்கிறீர்கள், அந்த வயதான தலைநரைத்த தாய்மார்கள் அங்கே அழகானவர்களாய் இருப்பார்கள், அவர்கள் உங்களைக் காண்பார்கள். ஒரு மலர் கூடையைக் (pot of flowers) கொண்டு குறிப்பிட்டுக் காட்டுவதோ, அல்லது ஒரு வயதான தலைநரைத்த நபருடைய ஏதோவொரு படத்தைக் கொண்டு குறிப்பிட்டுக் காட்டுவதோ அல்ல; ஆனால் அவர்கள் உயிர்த்தெழுதலின் சாயலிலும் அழகிலும் அங்கே இருப்பார்கள், அவர்கள் கிறிஸ்துவின் சாயலில் அவர்களுடைய வானத்துக்கு உரிய சரீரங்களைக் கொண்டவர்களாய் (celestial bodies), என்றென்றுமாக வாலிப வயதினர்களாகவும் அழகானவர்களாகவும் அங்கே நிற்பார்கள். நிச்சயமாக, அது தான் இளைப்பாறுதல். நான் அந்த தாய்மார்களின் தினத்துக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன். அதுவே முடி சூட்டு விழா. மேற்சட்டையின் (கோட்) முன் புறத்திலுள்ள மடித்து விடப்படும் பகுதியைக் (lapel) கொண்டுள்ள முடிசூட்டு விழா அல்ல, ஆனால் தேவன் அவளை மறுரூபப்படுத்துவதற்காக, ஆத்துமாவின் முடிசூட்டு விழா. 86. வயதாகி, வலுவிழந்து, முடக்கு வாதத்தினால் நடுங்கிக் கொண்டிருக்கும் என்னுடைய வயதான தாயை நான் எண்ணிப் பார்க்கிறேன். அவர்கள் அந்நாளில் அவ்வாறு இருக்க மாட்டார்கள். அது அப்போது வித்தியாசமாக இருக்கும். நாம் சுற்று முற்றும் நோக்கிப் பார்க்கத் துவங்கும் போது, அந்த மகத்தான வெளிச்சமானது பரவத் துவங்கி, அந்த மகத்தான ஜனக் கூட்டமானது அதிகமாகி, அதிகமாகி, அதிகமாகிக் கொண்டே இருக்கும். அது எல்லாம் அப்படியே கிறிஸ்துவனவர் நெருங்கி வந்து கொண்டிருப்பதை பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன. அந்தப் பாடல் கூறுகிறபடி, ,''சிறிது கழிந்து, கடைசியாக இயேசுவை நான் காண்பேன்.,'' அவர் எனக்காக காத்துக் கொண்டிருப்பார், இயேசு தம் அழகுமிகு சிங்காசனத்தில், மிகுந்த இரக்கத்தோடும் உண்மையோடும் வீற்றிருப்பார், இந்த நாள் வெற்றியோடு முடிந்த பிறகு, அவர் என்னை வீட்டிற்கு வரவேற்றுக் கொள்வார். 87. அப்போது நாம் அவரைக் காண்கையில் - நாம் இப்போது இருப்பதைப் போன்று இருக்க மாட்டோம் - அவரை இன்னும் அதிகமாக எப்படி நேசிப்பது என்பதை நாம் அறிந்து கொள்வோம். நாம் சிறிது பயத்தோடு பின்னால் நின்று கொண்டிருக்க மாட்டோம், ஏனென்றால் நாம் அவரைப் போலவே இருப்போம். நல்லது, அவர் இப்பொழுது இருப்பதைக் காட்டிலும் நம்மோடு அதிக தொடர்புடையவராக இருப்பார். நாம் அவரை இன்னும் மேலாகப் புரிந்து கொள்வோம், ஏனென்றால் நாம் இந்த சாவுக்குரிய சரீரங்களில் அதிக தூரமாக இருக்கிறோம்; அப்போது நாம் அவருடைய மகிமையின் சரீரத்திற்கு ஒப்பான ஒரு சரீரத்தைக் கொண்டு இருப்போம். நாம் அவரை எவ்விதம் ஆராதிப்பது என்பதை அறிந்து கொள்வோம். அவருடைய ஜீவனின் பிரசன்னமானது எவ்வாறு நம்மைச் சரிப்படுத்தி, வயோதிபத்திலிருந்து நம்மைத் திரும்ப வாலிபத்திற்கு மறுரூபப்படுத்தி, சீர்குலைந்து போன சகலத்தையும் நேராக்கி இருக்கிறது என்பதை நாம் காணும் போது, ஓ, அப்போது அவருடைய வல்லமை ஆனது நம்மை ஏன் சுகப்படுத்தினது என்பதைப் புரிந்து கொள்வோம். 88. ''அவரால் எவ்வாறு அதைச் செய்ய முடியும்-? இது என்னவாகும்-?,'' என்னும் கேள்விகள் நம்முடைய சிந்தையில் இருந்து வருகின்றன. எப்படியும், மனித அறிவுக்கு எட்டாத வகையில், அவைகள் எல்லாம் மறைந்து போய் விடும். நம்முடைய சிந்தைகளின் பின்னால் கட்டி வைத்திருக்கிற (மர்ம) முடிச்சுகள், ''இது இருக்குமா-? அது எவ்வாறு முடியும்-?,'' (என்கின்றன). எவ்வாறேனும், அல்லது வேறொரு கம்பீரமான விரல்கள் அப்படியே அந்த குழப்பத்தை நீக்கி, அந்த முடிச்சுகளை அவிழ்க்கும், அதெல்லாமே ஒரு பெரிய அன்பின் கிரீடத்திற்குள் மங்கி மறைந்து விடும். 89. அப்போது நாம் அவரைக் காண்போம். அப்போது நாம் அவருக்கு ஒப்பானவர்களாய் இருப்போம். அப்போது நாம் அவரை ஆராதிப்போம். அப்போது தாயானவள் எப்படியிருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறாரோ அப்படியே நாம் அவளைக் காண்போம். அங்கே தாயானவள் தன்னுடைய குடும்பத்தினர் இல்லாமல் முழுமையடைய மாட்டாள். 90. ஏனென்றால் அவளுடைய முழு ஜீவியத்திலும் மகத்தான நேரம் என்ன என்றால், மேஜையைச் சுற்றிலும் பிள்ளைகள் எல்லாரும் ஆரோக்கியம் உள்ளவர்களாகவும் சந்தோஷமுள்ளவர்களாகவும் இருப்பதைக் காண்பதும், அவள் காபியை ஊற்றிக் கொடுப்பதையும், அல்லது அவள் செய்வது எதுவாய் இருந்தாலும், இரவு ஆகாரத்தை ஆயத்தம் செய்வதையும், அவளும் தகப்பனாரும் உட்கார்ந்திருப்பதைக் காண்பதும் தான். ஏன், அது தான் தாயுடைய ஜீவியத்திலேயே சந்தோஷமான நேரமாகும்: அவளுடைய பிள்ளைகள் எல்லாரும் வீட்டில் இருப்பதைக் காண்பது. 91. இப்பொழுது, அந்த நாளைத் தவறவிட்டு விடாதீர்கள் - அதைத் தவற விட்டு விட வேண்டாம். உங்களுடைய குடும்பத்தின் மகத்தான சங்கிலியானது இணைப்பு இணைப்பாக ஒன்றோடொன்று பொருந்தியிருக்கட்டும். சக்கரத்தின் ஒவ்வொரு குறுக்குக் கம்பியும் (spoke) சக்கரத்தில் இருக்கட்டும். அப்படி ஆனால், நாம் நம்முடைய குடும்பத்தினரோடும் கூட்டத்தினரோடும் அந்த நித்தியத்தின் விதானங்களில் மறுகரையில் இருக்கும் போது, அது என்னவொரு நாளாயிருக்கும்-! அப்போது நாம் புரிந்து கொள்வோம். 92. வெளிப்படுத்தின விசேஷம் 1ம் அதிகாரத்தில் இதை வாக்குத்தத்தம் பண்ணினவர் அவர் தான், அங்கே, ''இருபுறமும் கருக்குள்ள பட்டயம் அவர் வாயிலிருந்து புறப்பட்டது (வெளி. 1:16). அவர் தேவனுடைய வார்த்தை என்று அழைக்கப்பட்டார்,'' என்று அது கூறுகிறது. ''மரித்தேன், ஆனாலும், சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்,'' என்று கூறின அந்த அதே உதடுகளிலிருந்து தான் இதுவும் வந்திருக்கிறது. அந்த அதே உதடுகளிலிருந்து தான், பரிசுத்த யோவான் 6:30-ல், அது இதைக் கூறுகிறது, ''நான் ஒன்றையும் இழந்து போகாமல், நான் மீண்டும் அவைகளை கடைசி நாட்களில் எழுப்புவேன்,'' என்று கூறுகிறது. அந்த வாக்குத் தத்தத்தைப் பண்ணினவர் அவர் தான்; அந்த அதே விலையேறப் பெற்ற உதடுகள் தான் அதை வாக்குப் பண்ணி இருக்கிறது... நம்மை இரட்சிக்கிறவரும், நம்மை சுகமாக்குகிறவரும், நம்மை மீட்கிறவரும், கடைசி நாளில் நம்மை உயிர்த்தெழச் செய்கிறவரும் அவர் தான். 93. அந்நாளில் மறுபடியும் ஒன்றாக இணையும் இம்மகத்தான குடும்பத்தில் இருந்து பிரிந்திருக்கிற அந்த சிறு பலவீனமான இணைப்பு நீங்களாக இருந்தால், பரலோகத்தின் தேவன் தாமே, இக்காலையில், எப்படியாவது ஒரு விளங்கிக் கொள்ள இயலாத வழியில் உங்களுடைய சிந்தையில் கட்டப்பட்டு இருக்கும் அந்த சிறு (மர்ம) முடிச்சுகளை அவிழ்த்து, அவர் உங்களுக்காக வைத்திருக்கிற அன்பை உங்களுக்கு வெளிப்படுத்துவாராக, நீங்கள் அவருக்கு சேவை செய்யும்படிக்கு இனிமையுடன் வருவீர்களாக. நாம் இக்காரியங்களைக் குறித்து சிந்திக்கையில், ஜெபிப்போமாக. 94. நாம் ஜெபிப்பதற்கு முன்பு, நீங்கள் உங்கள் தலைகளைத் தாழ்த்தி இருக்கையில், நான் உங்களிடம் ஒன்றைக் கேட்கப் போகிறேன். இந்த தாய்மார்களின் தினத்தில், உங்களுடைய ஜீவியங்களை அவருக்கு திரும்பவும் புதிதாக அர்ப்பணித்து, அந்த உயிர்த்தெழுதலை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்க வாஞ்சிக்கிறீர்களா-? அவருக்கு நேராக உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா-? ஒவ்வொருவரும்...-? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 95. இப்பொழுது, ''ஓ தேவனே, நான் இன்னும் என்னை அந்த இணைப்பிற்குள் பொருத்தவில்லை. தாயார் மகிமையினூடாக சுற்றிலும் நோக்கிப் பார்க்கும் போது, அங்கே காணப்படாத ஒரு தவறிப் போனவனாக நான் இருக்கிறேன். நான் அங்கே இருக்க மாட்டேன், நான் இன்னும் தேவனோடு சமாதானமாய் இல்லை. நித்திய ஜீவனின் நம்பிக்கை என்னில் கிடையாது. ஆனால் இன்றே நான் அதைச் செய்ய விரும்புகிறேன்,'' என்று கூறுகிற ஒரு பாவி இங்கே இருக்கிறார்களா-? நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்தி, ,''சகோ.பிரன்ஹாமே, இந்த நேரத்தில் எனக்காக ஜெபியுங்கள். நான் ஜெபத்தில் நினைவு கூரப்பட விரும்புகிறேன், கடல் தாண்டி, ஜீவ கடலைத் தாண்டி அன்பார்ந்தவர்கள் எனக்கு உண்டு, நான் அவர்களை சந்திக்க விரும்புகிறேன்,'' என்று கூறுவீர்களா-? உங்கள் கரத்தை உயர்த்துங்கள். 96. அல்லது பின்வாங்கிப் போன யாரோ ஒருவர், இந்நாளில் திரும்பி வந்து, ''கர்த்தாவே, நான் மீண்டும் உம்மிடம் என்னைத் தானே மறுபடியுமாக பிரதிஷ்டை பண்ணுகிறேன்; உம்மோடுள்ள என்னுடைய உடன்படிக்கையைப் புதுப்பித்துக் கொள்ள வருகிறேன்,'' என்று கூற விரும்புகிறவர்கள் உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா-? 97. எங்கள் பரலோகப் பிதாவே, அது சமீபித்து வருகையில், இந்த நாள் அந்த மகத்தான நிகழ்வுக்கு ஒரு நாள் நெருங்கி விட்டதாக ஆகிவிட்டது. இதில் ஒரு பாகமாக இருப்பதைக் காணும்பொருட்டு, நாங்கள் ஒவ்வொரு வருடமும் அப்படியே அதிகமாக அதற்கு துரிதப்படுத்தப்படுகிறோம். 98. பெந்தெகொஸ்தே நாளில், ஜனங்கள் வழக்கமாக கூடாரம் மற்றும் பரிசுத்த ஸ்லத்தை சுத்திகரித்து, பாவ நிவாரண பலி செலுத்தும்படிக்கு எருசலேமுக்குப் போவார்கள்; அந்த ஆட்டுக்குட்டியானது அங்கே மரித்த போது, பாவத்தை நீக்கும்படி தேவனுடைய ஆட்டுக்குட்டியானவர் மரிக்கும் ஒரு நேரம் வரும் என்பதை அவர்கள் ஒவ்வொரு வருடமும் நினைவு கூர்ந்தார்கள். அந்த சிறு ஆட்டுக் குட்டியானது சத்தமிட்டு, இரத்தம் அவர்களுடைய கரங்கள் மேல் தெளிக்கப்படும் ஒவ்வொரு தடவையும், தேவனுடைய ஆட்டுக் குட்டியானவர் சிலுவையில், ''ஏலி, லாமா... ஏலி, லாமா...,'' என்று கதறும் ஒரு நேரம் அங்கே இருக்கும் என்பதை அவர்கள் நினைவு கூர்ந்தனர். 99. நான் ஜெபிக்கிறேன், தேவனே, நாங்கள் இன்று நோக்கிப் பார்த்து அதைக் காணும் போது... ஒரு சில வாரங்களுக்கு முன்பு, கலிபோர்னியாவிற்காக உம்முடைய ஆராதனையை விட்டு புறப்பட்டுச் செல்வதற்கு முன்பு, இந்த இந்தியானா மரஞ்செடி கொடிகள் இல்லாமல் வெறிச்சோடி மரித்து கிடந்தது; வெளித் தோற்றத்தில் அங்கே ஜீவனே இல்லாமல் இருந்தது. கடந்த இலையுதிர் காலத்தில் மரித்துப் போன பூக்கள், மரங்களை விட்டு உதிர்ந்து போன இலைகள், வேர்களுக்குள் போய் விட்டிருந்த மரங்களின் சத்து, மற்றும் யாவுமே மரித்துப் போயிருந்தன. 100. ஆனால் சூரியன் ஒரு வித்தியாசமான விதத்தில் பிரகாசிக்கத் துவங்கும் ஒரு பருவ காலம் அங்கே இருந்தது. குளிர் காலம் முழுவதும் பிரகாசித்து இருந்த அதே சூரியன் தான், ஆனால் அந்த அடிப்படைக் கூறுகள் (elements) தான் மாறி, அது வித்தியாசமாக பிரகாசித்தது. அந்த அடிப்படைக் கூறுகளோடு, சூரியனின் பிரகாசத்தின் மூலமாக, ஜீவனானது எல்லா இடங்களிலும் சடிதியாகத் தோன்றினது. இலைகள் மறுபடியும் மரங்களில் வந்தன. இலை... ஜீவனானது இலையை விட்டுப் போய், அந்த இலையானது உதிர்ந்து விழுந்திருந்தது, ஆனால் ஜீவனோ அந்த நிலத்திற்குள் போயிருந்தது; (பிறகு) அது புது அழகோடும், வாலிபத்தின் ஒளியோடும் திரும்பி வந்தது. அதனுடைய இனிய நறுமணத்தையும், அதனுடைய பிரகாசமான ஒளிக் கதிர்களின் அழகையும் விட்டு, பூமிக்குள் விழுந்து போயிருந்த அந்தப் பூவானது, ஒரு புதிய நறுமணத்தோடு மீண்டும் பிறந்தது - அதன் வாலிபத்தில் வெடித்து வெளியே வந்தது. கர்த்தாவே, இந்த மணி நேரங்களில், நாங்கள் எதைப் பற்றி நினைவு கூறுகிறோம்-? 101. இந்த உலகமானது, இருண்டு போனதும் கதறிக் கூச்சலிடும் வனாந்திரமான ஒரு நிலையிலிருந்து அழகான பரதீசாக மாறினது, தேனீக்களும் பறவைகளும் பாடிக் கொண்டிருந்தன, எல்லாமே மகிழ்ந்து சந்தோஷத்தோடு இருந்தன, மரங்கள் வெதுவெதுப்பான வசந்த கால தென்றல் காற்றில் துள்ளி விளையாடின. சூரியனின், சூ-ரி-ய-னி-ன் (s-u-n) நிமித்தமாக அன்பும் சந்தோஷமும் மீண்டும் பூமியின் மேல் இருந்தன. 102. ஆனால் ஏதோவொரு நாளில், கு-மா-ர-ன் தம் செட்டைகளின் கீழ் ஆரோக்கியத்தோடு வருகிறார், அந்த மரத்தில் இருந்த சத்து நிலத்தில் இருந்தது போலவும், அந்த பூவினுடைய விதையில் இருந்த ஜீவனைப் போன்றும் மறைந்திருந்த அந்த சிறு ஜீவன்கள், அது மீண்டும் ஒரு போதும் மங்கி மறைந்து போகாத புதியதிற்கு எழும்பி வரும். ஓ, நாங்கள் இதற்காக எவ்வளவாக உமக்கு நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம்-! 103. இக்காலையில், அநேக அநேக கரங்கள் மேலே உயர்த்தப்பட்டு உள்ளன, திரைக்கு அப்பால் அங்கே ஏதோ ஓன்று உள்ளது என்பதை அவர்கள் அறிவார்கள். அவர்கள் தாயாரைக் காண பெரும் வாஞ்சையாய் இருக்கிறார்கள். அவர்களுடைய அன்பார்ந்தவர்களையும், அவர்களுக்கு அறிமுகம் ஆனவர்களையும் கண்டு, அவர்கள் எப்படியாக இங்கே வந்து, காலமெல்லாம் இருப்பார்கள் என்ற இந்த எல்லா பரம இகசியங்களையும் கண்டுபி டிக்க வாஞ்சையாயிருக்கிறார்கள். அவை எல்லாமே மறைந்திருக்கும் திரைக்குப் பின்னால் இருக்கின்றன. ஏதோவொரு நாளில் நீர் வருவீர். அவர்கள் தங்கள் கரங்களை உயர்த்தி இருக்கிறார்கள்; கர்த்தாவே, அவர்கள்-அவர்கள்- அவர்கள் நிச்சயத்தோடு இருக்க விரும்புகிறார்கள். அவர்கள் மீண்டுமாக தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்கிறார்கள், அவ்வாறே நானும் என்னை புதுப்பித்துக் கொள்கிறேன். இப்பொழுது, எங்களுக்கு ஒத்தாசை செய்யும், கர்த்தாவே. எங்களுடைய விசுவாசத்தையும் எங்கள் பலத்தையும் புதுப்பித்து அருளும். 104. கடந்த 40 வருடங்களில், கர்த்தருடைய வருகையானது சமீபமாய் இருப்பதை நாங்கள் உணருகையில், அங்கே பூமியின் மேல் ஒரு புதிய பெந்தெகோஸ்தே வெளிப்பட்டுத் தோன்றினது. ஆவியானவர் காரியங்களை வெளிப்படுத்தத் துவங்குகிறார். இதோ நாங்கள் வருகைக்கு சற்று முன்பு உள்ள கடைசி அடையாளத்தில் இருக்கிறோம். நெருங்கி வரும் கர்த்தருடைய (வருகையானது) அருகாமையில் உள்ளது என்பதை நாங்கள் அறிவோம். வியாதியஸ்தர்கள் தங்கள் வியாதிகளிலிருந்து சுகமடைந்து கொண்டு இருப்பதை நாங்கள் காண்கிறோம், அது அப்போஸ்தலர்கள் முதற் கொண்டு 2000 வருடங்களாக உலகத்திற்கு புரியாத புதிராக இருந்து வருகிறது. ஆனால் இதோ அது மீண்டும் தோன்றுகிறது, தீர்க்கதரிசிகள் எழும்புகிறார்கள், தூதர்கள் தோன்றுகிறார்கள். அடையாளங்களும் அற்புதங்களும் நடப்பிக்கப்படுகின்றன. அது என்னவாக இருக்கிறது-? உயிர்த்தெழுதல் சமீபமாயிற்று. கு-மா-ர-ன் வருகிறார். 105. கர்த்தாவே, நாங்கள் ஆயத்தமாகட்டும். ஒவ்வொரு தெய்வீக வாக்குத் தத்தத்தையும் நாங்கள் அணைத்துக் கொள்ளட்டும்; விஞ்ஞானத்தின் மூலமாகவும், மற்றவைகளின் மூலமாகவும் சம்பவிக்க முடியாத, குவிந்து காணப்படுகிற இந்த சிறு மர்ம முடிச்சுகளைக் குறித்து நாங்கள் சிந்திக்க வேண்டாம். அவர்கள் இக்காலையில், அழிவில்லாதவைகளைக்... கொண்டு அந்த முடிச்சுகளை அவிழ்க்கத் துவங்கட்டும். அவர்கள்... 106. (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.)... நன்றாக இசைக்கிற ஒரு இசைக் கருவியைப் போல, ''மரித்தேன், ஆனாலும், சதாகாலங்களிலும் உயிரோடு இருக்கிறேன். கொஞ்ச காலத்தில் உலகம் என்னைக் காணாது; நீங்களோ என்னைக் காண்பீர்கள். உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருப்பேன். கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அடையாளங்களும் அற்புதங்களும் சம்பவிக்கும்; மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள், வாலிபர் தரிசனங்களை அடைவார்கள், என்று தேவன் உரைக்கிறார்,'' என்ற தாளத்தைப் பாடும்படிக்கு அவர் தேவனுடைய வேதாகமத்தின் வார்த்தைகளின் ஊடாக சத்தத்தை உண்டாக்கும் நேரத்தில், அது, பின்மாரி மழை மற்றும் முடிவு காலத்தின் அடையாளமாகும். கர்த்தாவே, அது எங்கள் மத்தியில் உணரப்படட்டும், எங்களுடைய விசுவாசம் உறுதியாய் இருப்பதாக. நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென்.